பொதுவாக கைபேசியில் பண பரிவர்த்தனைக்கு கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்துவார்கள்.
தற்போது பொதுமக்கள் வங்கிகளுக்கு புதிய வங்கி கணக்கினை தொடங்குவதற்கு மட்டுமே செல்கிறார்கள்.
மேலும் தங்களது கணக்கில் உள்ள பண பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள், ஒரு பொருளை வாங்க விற்க, எளிதில் இந்த "ONLINE PEY" வசதி பயன்படுகிறது. இந்த செயலிகளில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
அதாவது UPI LITE செய்லில் குறைந்தபட்ச இருப்பு வைக்க முடியும். உங்கள் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து நிலையான தொகையுடன் உங்கள் யுபிஐ லைட் வாலட் தானாகவே நிரப்பப்படும். ரீசார்ஜ் தொகையும் உங்களால் அமைக்கப்படும். இந்த வாலட் வரம்பு ரூ.2,000க்கு மேல் இருக்கக்கூடாது.
யுபிஐ லைட் கணக்கு ஒரு நாளில் ஐந்து டாப்-அப்கள் வரை அனுமதிக்கப்படும். UPI LITE ஒவ்வொரு பயனருக்கும் ரூ 500 பரிவர்த்தனைகள் வரை பண பரிமாற்றம் செய்யலாம். இதன் மூலம் அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை இருப்பு வைக்கலாம். UPI LITE இன் ஒரு நாளைக்கான பரிவர்த்தனை தொகை ரூ 4000.
இந்தய ரிசர்வ் வங்கி இந்த வரம்பு தொகையை ரூ 500, ரூ 1000 ஆக உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியது. இதனால் UPI LITE வாலட் வரம்பு ரூ.2,000ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment