Join THAMIZHKADAL WhatsApp Groups
நம் தமிழகத்தின் தென் மாவட்டமான தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது.பணி குறித்த விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: வங்கி வேலை
நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பணியின் பெயர்:
*சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ்
காலிப்பணியிடங்கள்:
சிறப்பு அதிகாரி பணிக்கென மொத்தம் 170 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க உள்ள நபர்களுக்கு அதிகபட்ச வயது தகுதி 26 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மாத ஊதியம்:
இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.72,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
1)ஆன்லைன் தேர்வு
2)நேர்முகத் தேர்வு(ஆங்கிலம்)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.tmbnet.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27-11-2024
No comments:
Post a Comment