Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 3, 2024

TNPSC: குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களாக நீங்கள்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய செய்தி!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

ஜாதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை சமர்ப்பிப்பது குறித்த வழிமுறைகள் இதில் அடங்கும்.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் 8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த 28ம் தேதி வெளியானது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது ஜாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதுவரையிலும் சான்றிதழ்களைப் பெறாத தேர்வர்கள், உரிய அலுவலா்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பழங்குடியின வகுப்பினராக இருந்தால், வருவாய்க் கோட்ட அலுவலா், உதவி ஆட்சியர், சார் ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோரில் ஒருவரிடம் விண்ணப்பித்து சான்று பெறலாம்.

ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததியர் சமூகமாக இருந்தால் ஜாதிச் சான்று வழங்கும் அதிகாரம் வட்டாட்சியருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர் ஆகியோருக்கு வட்டாட்சியர் நிலைக்குக் குறையாத வருவாய்த் துறை அலுவலர், தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா், ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புத் துணை வட்டாட்சியர், ஆகியோரில் ஆகியோரில் ஒருவர் சான்றிதழ் அளிக்கலாம்.

சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் போது, இணையவழியில் பெறப்பட்ட சான்றிதழ்களை தேர்வாணையம் ஏற்றுக்கொள்ளாது. தேர்வர்கள் முறையான மின் கையொப்பமிடப்பட்ட இணையவழியில் பெறப்பட்ட வகுப்புச் சான்றிதழ் அல்லது தமிழ் வழி கல்வி பயின்ற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இணையவழியில் பெறப்பட்ட இத்தகைய வகுப்புச் சான்றிதழ் அல்லது தமிழ்வழி கல்வி பயின்றோர் சான்றிதழில் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை பெறத் தேவையில்லை.

மாற்றுத்திறனாளி சான்றிதழ்:

குரூப் 4 தேர்வில் மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்கள் உரிய படிவத்தில் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தந்தை, தாய், கணவர் ஆகியோரில் ஒருவரின் பெயர், புகைப்படம், குறைபாட்டின் வகை, குறைபாட்டின் சதவீதம் ஆகியன சரியாக பதிவிட வேண்டும். குறிப்பாக சான்றிதழானது உரிய மருத்துவர் அல்லது மருத்துவக் குழுவிடம் பெறப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News