Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 23, 2024

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

10- வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நேற்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தத்கல் முறையில் விண்ணப்பிக்க டிச., 26 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அரசுத் தேர்வு இயக்ககத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 (11,12ம் வகுப்பு) மற்றும் ரூ.500 (10ம் வகுப்பு) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தனி தேர்வருக்கு இறுதி வாய்ப்பு

இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகளை மார்ச்-ஏப்., 2025 தேர்வு எழுத விண்ணப்பிக்க உள்ள தனி தேர்வர்கள் இன்று (20ம் தேதி) மாலை 5:00 மணிக்குள் பவானி, பெருந்துறை, ஈரோடு, சத்தி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகள், கோபி நகரவை மகளிர் மேல்நிலை பள்ளி, ஈரோடு இடையன்காட்டு வலசு நகரவை உயர்நிலை பள்ளி, ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி நகரவை மேல்நிலை பள்ளி சேவை மையங்களில் விபரம் பெற்று கட்டண தொகை மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இறுதி நாள் என்பதால் தேர்வு எழுத விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News