Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 9, 2024

ஜேஇஇ பிரதானத் தேர்வு அடுத்​தாண்டு மே 18-ம் தேதி நடைபெறும் - கான்​பூர் ஐஐடி அறிவிப்பு​

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பொறி​யியல் படிப்பு​களுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு அடுத்​தாண்டு மே 18-ம் தேதி நடைபெற உள்ளதாக கான்​பூர் ஐஐடி அறிவித்துள்ளது.

நாடு முழு​வதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்பு​களில் சேர ஒருங்​கிணைந்த நுழைவுத்​தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். இவை ஜேஇஇ முதன்​மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்​களாக நடத்​தப்​படும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு மே 18-ம் தேதி நடத்​தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்வை நடத்​தவுள்ள கான்​பூர் ஐஐடி தற்போது வெளி​யிட்​டுள்​ளது.

அதன்படி பிரதானத் தேர்வு 2 தாள்​களாக தலா 3 மணி நேரம் நடைபெறும். இவ்விரு தேர்​வு​களை​யும் தேர்வர் எழுத வேண்​டியது கட்டாய​மாகும். முதல் தாள் காலை 9 முதல் மதியம் 12 மணி வரையும், 2-ம் தாள் மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையும் நடத்​தப்​படும். ஜேஇஇ முதன்​மைத் தேர்​வில் தேர்ச்சி பெறு​பவர்கள் மட்டுமே பிரதானத் தேர்வை எழுத முடி​யும். இந்த பிரதானத் தேர்​வில் தேர்ச்சி பெறு​பவர்​களுக்கு நாடு முழு​வதும் உள்ள 23 ஐஐடி.களில் சேர்க்கை இடங்கள் கலந்​தாய்வு மூலமாக ஒதுக்​கப்​படும். இதற்கான இணையதள விண்​ணப்பப் பதிவு தொடங்​கும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் வெளி​யிடப்​படும். மேலும், கூடுதல் விவரங்களை https://jeeadv.ac.in/ என்ற வலைத்​தளத்​தில் சென்று அறிந்து கொள்​ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரி​வித்​தனர்.

ஜேஇஇ முதன்​மைத் தேர்வு வரும் ஜனவரி மற்றும் ஏப்ரல் ​மாதங்​களில் 2 கட்​டங்​களாக நடத்​தப்​படும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டுள்ளது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News