Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பையும், பொங்கல் பரிசு தொகையும் வழங்குவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருள் இல்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைவருக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பொங்கல் பரிசுக்கான டோக்கன் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வருடம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் நிலையில் அதற்கு முன்பாகவே இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே அதாவது மாத தொடக்கத்திலேயே பெரும்பாலும் வரவு வைக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை ஆகிய இரண்டையும் பெறுபவர்கள் ஜனவரி மாதம் மட்டும் 2000 ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment