Join THAMIZHKADAL WhatsApp Groups

கற்பித்தலை தவிர மற்ற பணிகளில் தான் நேரம் கரைகிறது என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத மற்ற பணிகள் என்று நூற்றுக்கும் அதிகமான திட்டங்களை பட்டியலிட்டு, இதில் எங்கே மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் இருக்கிறது என்ற கேள்வியோடு இணையவாசிகள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான நேரம் மிக மிக சொற்பமே என்றும், அதை தவிர்த்து பல்வேறு கணக்கெடுப்புப் பணிகள், ஆய்வு பணிகள், திருவிழாக்கள், கலை விழாக்கள் என்று தான் பெரும்பாலான நேரம் கரைகிறது என்றும் ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டார்களா இல்லையா, அவர்களுக்கான விலையில்லாத திட்டங்கள் வழங்கப்பட்டதா இல்லையா, மாணவர்கள் எந்த நேரத்திற்கு பள்ளிக்கு வருகிறார்கள், என பல்வேறு புள்ளி விவரங்கள் குறித்த பதிவுகளையும் கணினியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment