Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 10, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01.2025

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கரோலசு இலின்னேயசு

திருக்குறள்: 

பால் :பொருட்பால்

 அதிகாரம்: மருந்து

 குறள் எண்:948

 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
 வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பொருள்: நோய் இன்னதென்றும், அதன் காரணத்தையும் போக்கும் வழியையும் அறிந்து பிழையரப் போக்க வேண்டும்.

பழமொழி :

சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது.

A man is affected by his environment.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.     

  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.

பொன்மொழி :

தன் காலில் நிற்க ஒருவனுக்கு எது உதவுமோ,அதுவே உண்மையான கல்வி --சுவாமி விவேகானந்தர் 

பொது அறிவு : 

1. இமயமலைச் சரிவுகளில் காணப்படும் காடுகள் ____________ 

விடை: இலையுதிர் காடுகள் 

2.ஈரத்தைத் தேக்கி வைக்கும் சக்தி குறைவான மண்________

 விடை : செம்மண் 

English words & meanings :

 Shooting.     -       சுடுதல்

Volleyball.       -     கைப்பந்து

வேளாண்மையும் வாழ்வும் : 

 

ஜனவரி 10

கரோலசு இலின்னேயசு அவர்களின் நினைவுநாள்

கரோலசு இலின்னேயசு (Carl Linnaeus or Carolus Linnæus) (மே 23, 1707 - சனவரி 10, 1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு (scientific classification) முறைக்கும், பெயர்முறைக்கும் (nomenclature) அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (ecology) முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தையென அழைக்கப்படுகிறார்.

நீதிக்கதை

 காகமும் அன்னப்பறவையும் 


ஒரு குளத்தின் அருகில் காகம் வசித்து வந்தது. அதற்கும் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் அன்னப்பறவையும் வசித்து வந்தது. அந்த அன்னப்பறவை மணிக்கணக்கில் அந்தக் குளத்தில் நீந்திக் கொண்டே இருக்கும்.


காகத்திற்கு எப்போதுமே தன் நிறத்தை பார்த்து வருத்தமாக இருந்தது. அன்னப்பறவையின் நிறத்தை பார்க்கும் போது காக்கைக்கு பொறாமையாக இருந்தது. ஒருநாள் அந்த அன்னப்பறவையின் நிறத்தை பார்த்துக்கொண்டு காகம், “எனக்கும் இதுபோல் நிறம் வேண்டும்” என்று ஆசைப்பட்டது.


“இந்த அன்னப் பறவைக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகும் வெள்ளை நிறமும் உள்ளது” என்று காகம் யோசித்தது. “ஒருவேளை அந்தப் பறவை எப்போதும் தண்ணீரில் இருப்பதாலும், பல முறை குளிப்பதாலும் தான் வெள்ளையாக இருக்கிறதோ“என்று நினைத்தது.


காகமும், “இனிமேல் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை குளிக்க வேண்டும்” என்று  தீர்மானித்தது. அப்படி செய்தால் தானும் அழகாகவும், வெள்ளையாகவும் மாறிவிடலாம் என்று ஆசைப்பட்டது. அந்த ஆசையில் அழகாக மாறும் தன்னுடைய பயிற்சியை காகம் ஆரம்பித்தது.


காகத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள அன்னப்பறவையும் மற்ற பறவைகளும் காத்திருந்தன. பலமுறை குளித்த பிறகும் காகத்தின் தோற்றத்தில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இருந்தும் காகம் தன் முயற்சியை கைவிட தயாராக இல்லை. ஒரு நாளில் காகம் பலமுறை குளித்தது.


கடைசியில் ஒரு நாள் காகம் காய்ச்சலில் விழுந்தது. அதிலிருந்து நலம் பெற்று வர மிகவும் கஷ்டப்பட்டது.  அப்போதுதான் காகம் தன்னுடைய தவறை புரிந்துகொண்டது. தன் முயற்சியை கைவிட்டு, “நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்க பழகிக் கொள்ள வேண்டும்” என்று நினைத்தது. மனதில் அந்த மாற்றம் வந்தபின் காகம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் பறவையாக மாறியது.


நீதி : நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதில் சந்தோஷப்பட வேண்டும்.

இன்றைய செய்திகள்

10.01.2025

* பல்கலைக்கழக மானியக்  குழுவின் இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பான வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை  வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* ஜனவரி 12-ல் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

* பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னையை இரண்டாவது இடத்திற்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.

* அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ - 30,000 மக்கள் வெளியேற்றம்; பல வீடுகள், கட்டிடங்கள் எரிந்து நாசமாகின.

* அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர்: அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு தகுதி.

* ஹாக்கி இந்தியா லீக் போட்டி: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 3-வது வெற்றி.

Today's Headlines

* A separate resolution was passed in the Tamil Nadu Legislative Assembly urging the central government to immediately withdraw the two draft protocols of the University Grants Commission and the draft protocols related to the appointment of the Vice-Chancellor.

* Heavy rains likely in the delta districts on January 12: Chennai Meteorological Department announcement.

* Bengaluru has pushed down Chennai to  second place and became the most suitable city for women to work in.

* Forest fire in Los Angeles, USA - 30,000 people evacuated; many houses and buildings destroyed.

* Adelaide International Tennis Series: American player Madison Keys qualifies for the semi-finals.

* Hockey India League: Tamil Nadu Dragons team won for the 3rd time.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News