Join THAMIZHKADAL WhatsApp Groups
School News - மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் - 2025- செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள்
மார்ச்/ஏப்ரல் -2025, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும். பார்வையில் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றியே செய்முறைத் தேர்வுப் பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாமாண்டு மாணவர்களது செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக, ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடக் குறியீடுகள் (Subject codes இணைக்கப்பட்டுள்ளது. for Practical) விவரம் இத்துடன்
பள்ளி மாணாக்கருக்கு (Regular Candidates) செய்முறைத் தேர்வு
நடத்துதல்:
1. பள்ளித்
தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in σταότο இணையதளத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள UserID மற்றும் Password-g பயன்படுத்தி, பிற்சேர்க்கை 1 மற்றும் 2-குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதும்
பள்ளி மாணாக்கருக்கு, பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள், பிற்சேர்க்கை 1 மற்றும் 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நடத்தப்பட வேண்டும்.
மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கருக்கு (Regular candidates)
செய்முறைத் தேர்வு நடத்துதல்:
அரசாணை (நிலை) எண்.62. பள்ளிக் கல்வி (அ.தே)த் துறை.
நாள்.25.03.2022-ன் படி
1. மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் எழுதும் உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களது விருப்பத்தின் பேரில் செய்முறை தேர்வின் போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்தல்.
2.உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளித் தேர்வர்களது விருப்பத்தின் பேரில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் மட்டும், செய்முறைத் தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள் (Multiple Choice Questions) அடங்கிய வினாத்தாட்கள் வழங்கி செய்முறைத் தேர்வு செய்துகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள் (Absent candidates):
செய்முறைத் தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / தலைமையாசிரியர்கள். செய்முறை புறத்தேர்வில் பங்கேற்காத பள்ளி மாணவர்களின் பதிவெண் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் -B-ல் (Proforma-B) பாடவாரியாக (அனைத்து செய்முறை பாடங்கள்) பூர்த்தி செய்ய வேண்டும். இப்படிவத்தினை செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியலுடன் தவறாது இணைத்து அனுப்ப வேண்டும்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :
1. செய்முறைத் தேர்வு மையங்கள் அமைத்தல்.
2. செய்முறைத் தேர்வு நடத்துவது தொடர்பாக கீழ்க்கண்ட
பணியாளர்களை நியமித்தல்
i. முதன்மைக் கண்காணிப்பாளர்
ii. புறத்தேர்வாளர்கள் (External Examiner ஆக வேறு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்)
ii. அகத்தேர்வாளர்கள் (Internal Examiner ஆக அதே பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்)
iv. திறமையான உதவியாளர்கள் (தேவைக்கேற்ப)
V. எழுத்தர்
vI. அலுவலக உதவியாளர்கள். துப்புரவு பணியாளர். குடிநீர்
வழங்குபவர் (Waterman)
முதன்மைக் கல்வி அலுவலர்கள் போதுமான கல்வித் தகுதியுள்ள திறமையான பணியாளர்களை செய்முறைத் தேர்வு நடத்துவதற்கு நியமனம் செய்ய வேண்டும்.
செய்முறைத் தேர்வுகள் நடத்துவதற்கு துறை அலுவலர்களை நியமனம் செய்யத் தேவையில்லை.
முன்பணம் பெறுதல்:
பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்கள், தங்களது மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரை அணுகி செய்முறை புறத் தேர்வு நடத்துவதற்கு தேவையான முன்பணத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். செய்முறைத்தேர்வு முடிவுற்ற உடன் செலவினங்களை மேற்கொண்டதற்குரிய கணக்குகளை சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு உழைப்பூதியம் வழங்குதல்:
செய்முறைத் தேர்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைப்பூதியம் முன்பணம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களிடமிருந்து செய்முறைத் தேர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்பே. முன்பணம் பெற்றிருந்தால் மட்டுமே அந்தந்த பாட செய்முறைத் தேர்வு நடைபெறும் கடைசி நாளன்று பணியாளர்கள் அனைவருக்கும் உழைப்பூதியத்தை வழங்க இயலும். பட்டுவாடா செய்யப்படும் உழைப்பூதிய பற்றுச்சீட்டுகளில் ஆசிரியர்கள் / பணியாளர்களிடம் நீல மையினால் (Blue ink) மட்டுமே கையொப்பம் பெறப்பட வேண்டும்.
No comments:
Post a Comment