Join THAMIZHKADAL WhatsApp Groups
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத உள்ஒதுக்கீடு 8 சதவீதமாக குறைக்கப்பட்டு, அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஒதுக்கீட்டை 8 சதவீதமாக குறைக்கவும், உரிய கல்வித் தகுதி கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சு பணியாளர்களுக்கு (கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்) 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கவும், அதற்கு ஏற்ப விதிமுறைகளில் திருத்தம் செய்யுமாறும் அரசுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார்.
அதை ஏற்று, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கல்விப் பணி சிறப்பு விதிமுறைகளில் உரிய திருத்தம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment