Join THAMIZHKADAL WhatsApp Groups
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிலவரம் குறித்த ஆய்வு தமிழகத்தில் 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில் 3 - 16 வயது வரையிலான 28,984 மாணவ, மாணவியரிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 35 சதவீதம் 8-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை. 64 சதவீதம் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க இயலவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், 12 சதவீதம் 3-ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் மட்டுமே 2-ம் வகுப்பு பாடங்களை படிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு, ஆசிரியர் பணியிடங்கள் அவ்வப்போது முறையாக நிரப்பப்படாதது, ஆயிரக்கணக்கான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது, சமவேலைக்கு சம ஊதியம் அளிக்காதது தான் காரணம். எனவே மாணவ, மாணவியகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் காலிப் பணியிடங் களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment