Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
தமிழக தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இன்னசன்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியராக பிரதாப், திருவாரூர் ஆட்சியராக சிவசௌந்தரவள்ளி, சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், தருமபுரி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக சரவணன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தினேஷ் குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரஹ்மான் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தர்ப்பகராஜ், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன், நெல்லை மாவட்ட ஆட்சியராக சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் ஆட்சியராக இருந்த பழனி, அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக லலித் ஆதித்யா நீலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ், தொழிலாளர் நல ஆணையராக ராமன் நியமனம், தமிழக அரசின் பொதுத் துறை இணை ஆணையராக சரயு, தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் இணைய தலைமை செயல் அலுவலர் ஸ்ருதன்ஜய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் துணை ஆட்சியராக கிஷண் குமார், எம்டிசி மேலாண் இயக்குநராக பிரபு சங்கர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் மற்றும் செயலாளராக தட்சிணாமூர்த்தி, வணிகவரி இணை ஆணையராக பூங்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை செயலராக பிரதீப் யாதவ், துணை முதல்வர் உதயநிதியின் செயலர் பிரதீப் யாதவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராக ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகத் திட்ட இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை - குமரி தொழில் வழித்தட திட்டத்தின் மேலாண் இயக்குநராக கூடுதல் பொறுப்பும் வகிக்கிறார். தமிழக அரசின் வழிகாட்டி பிரிவு நிர்வாக இயக்குநராக தாரேல் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் வழிகாட்டி பிரிவு நிர்வாக இயக்குநராக தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ், பேரிடர் மேலாண்மை ஆணையராக தாமஸ் வைத்தியன், பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையராக ஜெயா, கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளராக அம்ரித், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறப்புச் செயலராக கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment