Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 8, 2025

இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு நெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் இல்லை என்று யுஜிசி புதிய வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி, யுஜிசி தலைமை அலுவலகத்தில் யுஜிசி வரைவு அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், இந்த வரைவு சீர்திருத்தங்களும் வழிமுறைகளும் உயர் கல்வியின் ஒவ்வொரு அம்சத்திலும் புதுமை, உள்ளடக்கம், நெகிழ்வுத்தன்மை மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றை புகுத்தும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பல்துறை படிப்புக்கு முக்கியத்துவம் (Multidisciplinary Eligibility)

யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் கூறும்போது, ’’இளங்கலை அல்லது முதுகலைப் படிப்பில் எந்தத் துறையாக இருந்தாலும் பிஎச்.டி. படிப்பில் அது கணக்கில் கொள்ளப்படாது’’ என்று தெரிவித்தார்.

2018 விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு, புதிதாகக் கொண்டு வரப்போவதாக என்னென்ன வரைவறிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? இதோ காணலாம்.

நெட் தேர்வு கட்டாயம் இல்லை

உதவிப் பேராசிரியர் பணியில் சேர நெட் தேர்வு கட்டாயம் என்ற 2018 விதிமுறைகளைப் போல அல்லாமல், நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வர்களை பி.எச்.டி மற்றும் பிற தகுதிகள் மூலம் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பல்துறை தகுதி

இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளை ஒரு துறையிலும் பிஎச்.டி. படிப்பை வேறு துறையிலும் முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் ஆகத் தகுதியானவர்கள் ஆவர். புதிய கல்விக் கொள்கை அம்சங்களின் அடிப்படையில் இந்த முன்மொழிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

நெட்/ செட் பாடங்களில் நெகிழ்வுத் தன்மை

அதேபோல நெட்/ செட் ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பாடம் ஒன்றாகவும் தேர்வர்கள் இளங்கலையில் தேர்ச்சி பெற்ற பாடமும் வெவ்வேறாக இருக்கலாம். அவர்களும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் ஆவர்.

பணி உயர்வுக்கு முனைவர் படிப்பு கட்டாயம்

பணியில் சேர்வதற்கு தேசிய தகுதித் தேர்வு கட்டாயம் இல்லை என்றாலும், உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளில் பதவி உயர்வு பெற பிஎச்.டி படிப்பு கட்டாயம் ஆக்கப்படும் என்று யுஜிசி வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மதிப்பீட்டு முறை

பப்ளிகேஷன் வெளியீடு உள்ளிட்ட எண்ணிக்கை அடிப்படையிலான மதிப்பீட்டு முறை மாற்றப்பட்டு, தர அடிப்படையிலான மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பாடப்புத்தகங்களை உருவாக்குதல், காப்புரிமைகளை தாக்கல் செய்தல், இந்திய அறிவு அமைப்புகள் (IKS) மற்றும் பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

அதேபோல பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை, வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News