Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 31, 2025

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ Public Exam- ஏப்ரல்-2025 பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ ஏப்ரல்-2025 பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.
ஆணை:

நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வெழுதவுள்ள செய்முறைத் தேர்வுகளை மார்ச்/ஏப்ரல்-2025 மாணாக்கர்களுக்கு பத்தாம் வகுப்பு அறிவியல் 22.02.2025 முதல் 28.02.2025 நடத்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.

கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

1. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று Click to access Online

2. SSLC MARCH/APRIL-2025 Click செய்யவும்.

3. தங்களது பள்ளியின் User ID மற்றும் Password-ஐ Type செய்து Sign In என்ற Option-ஐ Click செய்யவும்.

4. SSLC MARCH/APRIL-2025 SCIENCE PRACTICAL BATCH ALLOTMENT என்ற பகுதியினைClick செய்யவும்.

5. Mark Sheet στη Option- Click & Practical மதிப்பெண் பட்டியல் Download ஆகும். அதனை Printout எடுத்துக் கொள்ளவும்.

6. Download Attendance Sheet என்ற பகுதியை Click செய்தால் Attendance Sheet Download. இதனை தேர்வின்போது மாணவர்களிடம் கையொப்பம் பெற பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

7. இதனை அடிப்படையாகக் கொண்டு செய்முறைத் தேர்விற்கு மாணவர்களை அனுமதித்திடல் வேண்டும்.

பொதுவான அறிவுரைகள்

செய்முறைத் தேர்வு மையங்களாக செயல்படாத பள்ளிகள் தேர்வர்களின் பெயர்ப்பட்டியல் (நகல்) மற்றும் வெற்று மதிப்பெண் பட்டியல்களை தொடர்புடைய செய்முறைத் தேர்வுமையப் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் வழங்குதல் வேண்டும்.

செய்முறைத் தேர்வு முடிவுற்ற பின்னர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலிருந்தும் செய்முறை மதிப்பெண் பட்டியல்களை 04.03.2025-க்குள் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலிருந்து பள்ளி மாணவர்களது மதிப்பெண் பட்டியல் பெறப்பட்டவுடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாக Online-ல் பதிவேற்றம் செய்திடவேண்டும். இப்பணி 28.02.2025-ல் தொடங்கி 08.03.2025-க்குள் முடிக்கப்பட வேண்டும்.

தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள் அனைவரது செய்முறைத் தேர்வு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும். எந்த ஒரு மாணவரது மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருத்தல் கூடாது.

இறுதியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழை பூர்த்தி செய்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலரின் அலுவலக முத்திரையுடன் உதவி இயக்குநர்கள் கையொப்பமிட்டு, அச்சான்றிதழை 15.03.2025-6(5 கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு

மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி உரிய முறையில் திட்டமிட்டு. செய்முறைத்தேர்வினை தனிக்கவனம் செலுத்தி எந்தப் புகாருக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடைபெறும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top