Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியன் ரயில்வே RRB 2025-ஆம் ஆண்டில் 1000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு இந்தியன் ரயில்வேயின் கீழ் இயங்கும் பல பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவோருக்கு அரிதான வாய்ப்பு.
காலிப்பணியிடங்கள்: இந்தியன் ரயில்வேவில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் முதுகலை ஆசிரியர், பட்டதாரி பயிற்சி பெற்ற ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர், உதவி ஆசிரியர், இசை ஆசிரியர் மற்றும் அறிவியல் மேற்பார்வையாளர் போன்ற பதவிகளுக்கான சுமார் 1036 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பின்வரும் பதவிகளுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன:
முதுகலை ஆசிரியர்
பட்டதாரி பயிற்சி பெற்ற ஆசிரியர்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்
அறிவியல் மேற்பார்வையாளர்
வழக்கறிஞர்
நூலகர்
ஆய்வக உதவியாளர்
பயிற்சியாளர்
பதவிகள்:
இந்த பணியிடங்கள் தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேர்வு, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் நிரப்பப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி தகுதி:
இந்தியன் ரயில்வே ஆசிரியர் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடத்திற்கு தேவையான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தியன் ரயில்வே RRB ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 2025 ஜனவரி 7ஆம் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க கடைசித் தேதி 2025 பிப்ரவரி 6 ஆகும்.
தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறக்கூடும். இந்த அறிவிப்புகள் RRB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வின் முக்கியத் தேதிகள்:
விண்ணப்பத் தொடக்கம்: 2025 ஜனவரி 7
கடைசித் தேதி: 2025 பிப்ரவரி 6
தேர்வு மாதம்: ஏப்ரல் 2025
முழுமையான விவரங்களுக்கு: https://www.rrbchennai.gov.in/
No comments:
Post a Comment