Join THAMIZHKADAL WhatsApp Groups
![]() |
உலக வானொலி நாள் |
Health is happiness.
ஆரோக்கியமே ஆனந்தம்.
இரண்டொழுக்க பண்புகள் :
* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன்.
*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.
பொன் மொழி:
நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
பொது அறிவு :
1. எந்த நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது?
விடை: இங்கிலாந்து.
2. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ், தகவலை பெறுவதற்கான கால அளவு_____________
விடை: 30 நாட்கள்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
தற்போதைய, சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீரைப் பயன்படுத்த நீர் மேலாளர்கள் அதிக நிலையான தீர்வுகளைத் தேடுகின்றனர்.
பிப்ரவரி 13
நீதிக்கதை
நரியின் வஞ்சகம்
ஒரு காட்டில் எருது ஒன்று இருத்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதியில் பச்சைப்பசேல் என்று புல் மண்டிக் கிடந்தது. தான் இருந்த இடத்தில் கிடைத்த
புல்லே எருதுக்கு போதுமானதாக இருக்கும்.
எனினும், தூரத்துப் புல்லே கண்ணுக்கு அழகாக இருந்ததால், புல் மண்டிக் கிடந்த பகுதியை நோக்கி ஒரு நாள் புறப்பட்டது. அது போகும்போது, மரத்தில் இருந்த பச்சைக் கிளி அதைக் கூப்பிட்டது. “*எருதண்ணா எங்கேபோகிறீர்கள்?” * என்று கேட்டது பச்சைக்கிளி. "எதிரில் உள்ள புல்வெளிக்குப் புதுப் புல் தின்னப் போகிறேன்”? என்றது.
எருது.
“அண்ணா, வேண்டாம்; அங்கே புலியிருக்கிறது!”” என்று எச்சரித்தது பச்சைக்கிளி.
அப்போது, அங்கே நரி ஒன்று வந்து சேர்ந்தது. அது பச்சைக்கிளியைப் பார்த்து, “ஒருவர் ஒரு வேலையாகப் போகும்போது எங்கே போகிறீர்கள்? என்று கேட்பதே தவறு; மேலும் எருதண்ணா ஆசையாகப் புதுப்புல் தின்னப் போவதைத் தடுப்பது சரியில்லை. அங்கே புலியிருக்கிறது என்று சொல்லி அவரை பயமுறுத்துவது மிகமிகத் தவறு"என்றது.
மேலும், நரி, "புல்வெளியிலே புலியிருப்பதில்லை. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று நீ கேள்விப்பட்டது இல்லையா?அப்படியே புலியிருந்தாலும் எருதண்ணாவை நீ என்னவென்று நினைத்துக் கொண்டாய்?” எருதண்ணாவின் கொம்பு அதன் குடலைக் கிழித்து விடாதா?,"என்று கேட்டது.
நரியின் பேச்சைக் கேட்ட எருதுக்குக் கிளியின் மேலே கோபம் கோபமாக வந்தது. தன் வீரத்தைப் பாராட்டிய நரியோடு புல்வெளியை நோக்கிச் சென்றது. அது பேசிக்கொண்டே இன்பமாக மேய்ந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்து நரி தழுவியது.
புல்வெளியின் ஒரு புறத்தில் மறைந்திருந்த கிழட்டுப் புலி எருதின் மேல் பாய்ந்தது. பச்சைக்கிளியின் எச்சரிக்கையை
பொருட்படுத்தாமல்
நரியின் நயவஞ்சகத்திற்கு ஆளானதை எண்ணி எருது வருந்தியது.
கருத்துரை:-- வஞ்சகமில்லாதவர்கள் கூறும் கடுஞ்சொல்லும் நன்மையைத்தரும். வஞ்சகரின் இன்சொல்லோ துன்பத்தையே தரும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment