Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 14, 2025

த.நா அரசு ஊழியர்களின் CPS பிடித்தமும்! தவறான வருமான வரித் தளர்வுக் கோரிக்கைகளும்!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
த.நா அரசு ஊழியர்களின் CPS பிடித்தமும்! தவறான வருமான வரித் தளர்வுக் கோரிக்கைகளும்!!

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ள CPS எனும் Contributory Pension Scheme என்பது, PFRDA வழிகாட்டல்களான 'OPS இரத்து, ஊழியர் ஊதியத்தில் 10%ஐ பிடித்தல், அதேயளவு அரசும் பங்களிப்பு செய்தல்' என்ற மூன்றை மட்டும் கவனத்தில் மட்டுமே கொண்டு. . . . (நல்லா அழுத்தம் திருத்தமா வாசிங்க) கவனத்தில் - மட்டுமே - கொண்டு நாளது தேதி வரை எந்தவித சட்டப்பூர்வ அங்கீகாரமும் இன்றி 2003 முதல் 22 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள ஒரு திட்டமாகும்.

PFRDA எனும் ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தில் இணையாமாலும், PFRDA சட்டத்தின்படி 100% செயல்படுத்தப்படாமலும் உள்ள திட்டமான CPSல் தமிழ்நாடு அரசால் பிடித்தம் செய்யப்படும் தொகையானது ஓய்வூதியத் திட்டம் எனும் பெயரில் பிடித்தம் செய்யப்படுவதால் மட்டுமே GPF / TPF / PF போன்று CPSஐயும் 80Cல் கழிக்க முடிகிறது. மெய்யாகவே 80Cல் இதனைக் கழித்து வரித் தளர்வு பெறுவதற்கான தனிப்பட்ட சட்டப்பூர்வ அங்கீகாரத்தைத் தமிழ்நாடு அரசு வருமானவரித்துறையிடம் / வருமானவரிச் சட்டத்தின்கீழ் பெற்றுள்ளதா என்பதும் விடை தெரியாத & தெரிந்தாக வேண்டிய கேள்வியே.

இப்படிப்பட்ட சூழலில் தான், நாம் கடந்த 20 ஆண்டுகளாக PFRDAவின் NPS தொடர்பான வருமானவரிக் கழிவுப் பிரிவுகளின் கீழ் CPS தொகையைக் கழித்து வந்தோம். மேலும், வரிப்பிரிவுகள் பற்றிய விழிப்புணர்வு இன்மையால் CPS தொகையை IT Return-ன் போது 80CCD(2)ல் கழித்து Refund பெற்று வரும் நிகழ்வுகளும் நடைபெற்றன. இதுபோன்று ITRல் முறையற்ற வகையில் கோடிக்கணக்கான தொகையை தமிழ்நாட்டிற்கு Refund செய்து வருவதன் காரணத்தை ஆராய்ந்த வருமானவரித்துறை கடந்த 2 ஆண்டுகளாக இனி CPS தொகையை NPS பிரிவின் கீழ் கழிக்கக் கூடாதென மண்டலம் வாரியாக DDOகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. வேறு சில காரணங்களுக்கு DDO & Individual என இரு தரப்பிற்கும் Noticeகள் அனுப்பியும் வருகிறது வருமானவரித்துறை. மேலும், ஆடிட்டர்கள் மூலம் நடத்தப்படும் ITR முறைகேடுகள் குறித்து DDOகளுக்கும் (ஊதியம் வழங்கும் அலுவலர்) சில எச்சரிப்புகளை விடுத்துள்ளதோடே ஊழியர்களுக்கு உரிய வழிகாட்டல் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.

சரி. CPSஐ கழிக்கலாமா என்பதற்கு கடந்த காலங்களில் வருமான வரித்துறையிடம் RTIல் கடிதமெல்லாம் பெற்றுள்ளோமே என்றால். . . . தற்போது அதே அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பித்துப் பாருங்கள். பழைய பதிலைத் தர மாட்டார்கள். ஏனெனில் அவர்களும் தற்போதுதான் விழிப்படைந்துள்ளனர். மேலும், CPS குறித்து கேட்டால் NPS பற்றியும் Tire-1 பற்றியும் குறிப்பிட்டுத்தான் பதில் தருவர். அவ்வாறு அவர்கள் குறிப்பிடும் NPSற்கான வருமான வரிக் கழிவுப் பிரிவுகள் என்னென்ன? எதை எவ்வளவு ஏன் கழிக்கின்றனர்? என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

NPSற்கு மட்டுமான வருமான வரிக் கழிவுப் பிரிவு 80CCD ஆகும். இது 1, 1B & 2 என்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது.

👉 80CCD(1) :

NPSல் ஊழியரின் பங்களிப்புத் தொகையை கழிக்கலாம். அதிகபட்டசம் 10% of BP+DA. மேலும் இது 80Cன் 1,50,000 வரம்பிற்கு உட்பட்டது. எனவே, மொத்தக் கழிவு 80C + 80CCD(1) = ₹1,50,000/-

👉 80CCD(1B) :

இதில் பங்குச் சந்தையில் TIRE-1ல் முதலீடு செய்யப்படும் ஓய்வூதிய முதலீடுகளான APY & NPS தொகையில் 50,000 வரை கழிக்கலாம். இது 80Cன் 1,50,000 வரம்பிற்கு உட்பட்டது அல்ல. எனவே, 80C + 80CCD(1)ன் 1,50,000 இல்லாமல் கூடுதலாக ₹50,000 வரை கழிவு கிடைக்கும்.

NPS திட்டத்தின் கீழான அனைத்து முதலீடுகளும் TIRE-1ல் மட்டுமே முதலீடு செய்யப்படுகின்றன என்பதாலும், 80CCD(1)ல் அதிகபட்சம் 10% of BP+DA தானே தவிர, கட்டாயம் 10%ஐயும் அதில் மட்டுமே காட்டியாக வேண்டுமென்ற கட்டாயமல்ல என்பதாலும், NPS பிடித்தத்தைத் தேவையைப் பொறுத்து 80CCD (1) மற்றும் 80CCD(1B)ல் பிரித்துக் காண்பித்துக் கழிவு பெறலாம்.

மேலும், யார் வேண்டுமானாலும் தாங்களே வங்கி / அஞ்சலகம் வழியே NPSல் தனியாக முதலீடு செய்யலாம். அந்தத்தொகை TIRE-1ல் தான் முதலீடு செய்யப்படுகிறது என்பதால் அதில் ₹50,000/- வரை 80CCD(1B)ன்கீழ் கழிவு பெறலாம்.

TIRE-1ல் முதலீடுகளைப் பொறுத்தவரை 60 வயதில் 60% தொகை Lumpsum ஆகக் கிடைக்கும். மீதி 40% தொடர்ந்து முதலீடாகவே தொடரும்.

👉 80CCD(2) :

NPSற்கான அரசின் பங்களிப்பு (14%) தொகையானது மத்திய அரசு & பொதுத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் வருமானத்திலேயே (BP - DA - Allow - Employer NPS Contribution என) சேர்த்து Gross Salaryல் காண்பிக்கப்படும். அரசின் பங்களிப்பிற்கு 100% வரித்தளர்வு உண்டு என்பதால் அதனைக் கழிப்பதற்காக உள்ள பிரிவு தான் 80CCD(2).

நான் மேலே குறிப்பிட்டபடி NPSம் CPSம் சட்டப்படி சற்றும் தொடர்பற்றது என்பதை உணர்ந்திருப்பீர்கள். மேலும், NPS வரிக் கழிவுப் பிரிவுகள் குறித்த விளக்கத்தின் மூலம் மேலும் தெளிவடைந்து, நடப்பு ஆண்டு முதலே NPS பேரில் நமது CPS தொகையைக் கழிப்பதை நிறுத்திக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நீ என்னடா சொல்றது! - எங்காச நான் கழிக்குறேன்! - CPSஐ அரசாங்கந்தான பிடிக்குது; நான் அப்புடித்தான் கழிப்பேன்! - CPSஐ கழிக்கக் கூடாதுனு எந்த GOவும் இல்ல! - அங்க புடிக்கிறாங்க! - இங்க புடிக்குறாங்க! ஆடிட்டர்ரு சொல்லீட்டாரு! என்று குழந்தைபோல கடந்த காலத் தவறுகளை மீண்டும் தொடர்ந்தால் சிக்கல் உங்களுக்குத்தான். ஏனெனில் 8 ஆண்டுகள் பின்தங்கிய ஓட்டத்தில் இருந்த வருமானவரித் துறை, தற்போதைய தொழிற்நுட்ப வளர்ச்சியால் Updated ஆக உள்ளது. ஒற்றை Algorithm Program மூலம் கடந்த காலங்களுக்கும் சேர்த்து தண்டத்தொகை விதிக்கும் ஆற்றல் அதற்கு உள்ளது. கவனம்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top