Join THAMIZHKADAL WhatsApp Groups
அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் பாடங்களுக்கான 232 உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர் (உடற் கல்வி) பணியிடங்களுக்கான அறிவிக்கை எண். 001/RC/UCE&RC/2023, நாள் 24.11.2023 அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு, இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இத்தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்பட வேண்டும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது.
எனவே உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர் (உடற் கல்வி) பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற 2025 ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்விற்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (https://www.trb.tn.gov.in) தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக பதிவேற்றம் செய்யப்படும். அதனை பதிவிறக்கம் செய்து எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு:மேற்படி நுழைவுச் சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அனுப்பப்பட மாட்டாது.
No comments:
Post a Comment