Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 20, 2025

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 -10.03.2020-க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோருதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை நிராகரிப்பு செய்து` பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பார்வையில் காணும் கடிதங்களின் மீது தங்கள் கவனம் ஈர்க்கப்படுவதுடன், அதில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் ஆகியோருக்கு 10.03.2020-க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வு பாகம்-1-ல் தேர்ச்சி பெற்றதற்கான முன் ஊதிய உயர்வு வழங்கக் கோரப்பட்டுள்ளது.

2. மேற்காண் தங்களின் கருத்துருவை பரிசீலித்ததில், அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த(அ.வி.IV)த் துறை, நாள் 10.03.2020-ல் அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1-ற்கு வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு இரத்து செய்து ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசாணை (நிலை) எண்.116. பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த(அ.வி.IV)த் துறை, நாள் 15.10.2020-ல் பத்தி 4(3)-ல், 10.03.2020-க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு 31.03.2021-ற்குள் வழங்கி ஆணையிடப்படவேண்டும் என காலக்கெடு நிர்ணயித்து ஆணை அளியிடப்பட்டது. இக்காலக்கெடுவானது, 31.03.2021 அன்றுடன் முடிவடைந்த

நிலையிலும் மற்றும் இது அரசின் கொள்கை முடிவு என்பதாலும், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பணியாளர்களுக்கு தற்போது முன் ஊதிய உயர்வு வழங்கக் கோரும் தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top