Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 5, 2025

‛'எமிஸ்'- தளத்தில் பதிவேற்றும் பணியில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் விடுவிப்பு மார்ச் 1 முதல் அமலுக்கு வந்தது

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர், மாணவர்களின் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை விடுவித்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களின் விபரங்களை 'சமக்ர சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்து வந்தனர்.

இதனால் மாணவர்களுக்கு கற்பித்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் பாதிப்பதாக ஆசிரியர்கள் மற்றும் (டிட்டோஜாக்) தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் எதிரொலியாக ஆசிரியர், மாணவர்களின் பதிவு விபரங்களை 'எமிஸ்'-ல் பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நடைமுறை மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

அந்த வகையில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இனி 'எமிஸ்' தளத்தில் ஆசிரியர், மாணவர்கள் விபரம், அறிவியல் ஆய்வகம், நிதி, செலவினம், பள்ளி கொடையாளர், தகவல் தொடர்பு, புகார் மற்றும் செயலாணை, மாணவர்களின் கல்வி உதவி மற்றும் ஊக்கத்தொகை, ஆசிரியர் பாட விபர பட்டியல் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள், மாணவர்களின் உடல் நலன் சார்ந்த விபரங்களை 'எமிஸ்'-ல் பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

நிம்மதி பெருமூச்சு

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

இது போன்ற விபரங்களை பதிவேற்றம் செய்ய, அரசு பள்ளிகளுக்கு மட்டும் தற்காலிக அடிப்படையில் கணிணி உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் அவர்களே பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மத்தியில் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது, என்றனர்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top