Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 17, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2025

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சாய்னா நேவால்



திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: சான்றாண்மை

குறள் எண்:990

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.

பொருள்:
நிறைகுணம்
உடையவர் தன்னுடைய தன்மையில் குறைவாராயின்,பூமி அவர் பாரத்தைத் தாங்காது.

பழமொழி :

அச்சத்திற்கு மருந்து இல்லை.

There is no medicine for fear.

இரண்டொழுக்க பண்புகள் :

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.

பொன்மொழி :

நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து  வேறு எதுவுமில்லை .---ஒரிசன் ஸ்வெட்

பொது அறிவு : 

1. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு எத்தனை மாதங்களில் கைரேகை உருவாகும்? 

விடை: 6 மாதங்கள்.          

2. விமானத்தில் மொத்தம் எத்தனை என்ஜின்கள் இருக்கும்?

 விடை : 4 இன்ஜின்கள்   

English words & meanings :

Gardener.    -    தோட்டக்காரர்

Judge.     -     நீதிபதி 

வேளாண்மையும் வாழ்வும் : 

நம் வாழ்வில் நீர் சேமிப்பு மிக முக்கியம். நீர் சேமிப்புக்கு நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் உங்கள் வாழ்நாளில் சில மணிநேரங்களை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.

மார்ச் 17

சாய்னா நேவால் அவர்களின் பிறந்தநாள்


சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.

நீதிக்கதை

 நன்றி ஓடுகளே!

ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.

"முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.

ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும், தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்களை எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

இன்றைய செய்திகள்

17.03.2025

-  அரசுப் பள்ளிகளில் மே மாதத்துடன் ஒய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

-  விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர் கடன் வழங்கப்படும்: தமிழக வேளாண் பட்ஜெட்டில் தகவல்.

-  யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்கான உத்தேச பட்டியலில் புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

-  செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோ உடன் செல்லும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்.

-  இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: ஹோல்கர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

-  ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: 'பிளே-ஆப்' சுற்று 29-ந் தேதி தொடக்கம்.

Today's Headlines

- The school department has ordered the submission of the headmasters who will be retired in May .

-  Farmers will be given a loan of Rs 17,000 crore crop: Tamil Nadu Agricultural Budget

-  There are 6 new Indian historical symbols added to the proposed list of UNESCO traditional recognition.

-  Elon Musk's Space X spacecraft that goes with the Humanoid Robot to Mars.

-  Indianwells Open International Tennis Tournament

-  ISL Football Series: 'Play-Off' round starting on 29th.

Covai women ICT_போதிமரம்

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top