Join THAMIZHKADAL WhatsApp Groups
![]() |
உலக சிட்டுக்குருவிகள் தினம் |
Variety is the spice of life.
மாற்றம் என்பது மானிடத்தத்துவம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.
2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.
பொன்மொழி :
விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால், தோற்கடிக்க அல்ல, உன்னை பார்க்கவே எவரும் பயப்படுவர்.---பாரதியார்
பொது அறிவு :
1. இஸ்டோரியா என்பதன் பொருள் என்ன?
விடை : விசாரிப்பதன் மூலம் கற்றல்.
2. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது?
விடை: நீலகிரி
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
"நீங்கள் இருக்கும் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றாலும் நாளைக்கே பற்றாக்குறை வரலாம்.
வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. உங்களின் சிறு கவனமும் சில லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்."
மார்ச் 20
நீதிக்கதை
குரங்குகளுக்கு கூறிய புத்தி
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.
கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.
மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்.
பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளித்தனைத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது,
பிறகு குரங்குகளை நோக்கி "நண்பர்களே!மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள்" என்று புத்திமதி கூறிற்று. "உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார்" என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.
பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து தாக்கின.
நீதி :முட்டாளுக்கு புத்தி சொல்வது
வீண் முயற்சி தான்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment