Join THAMIZHKADAL WhatsApp Groups
2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், 2026ல் தமிழக முதல்வர் யார்? மக்கள், முதல்வராக யாரை விரும்புகிறார்கள்? என்று சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
அதில் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், 27% வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் 18% ஆதரவுடன் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 10% ஆதரவுடன் மூன்றாமிடமும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 9% ஆதரவுடன் நான்காமிடமும் பெற்றுள்ளனர்.
கடந்த பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
அரசின் நடவடிக்கை பற்றிய கருத்துக்கணிப்பில் 15% பேர் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும் 36% பேர் ஓரளவு திருப்தி என்றும் 25% பேர் திருப்தியில்லை என்றும் கூறியுள்ள நிலையில் 24% பேர் தங்கள் முடிவைக் கூறவில்லை.
No comments:
Post a Comment