Join THAMIZHKADAL WhatsApp Groups

பள்ளிக்கல்வி துறையில் மாவட்டம் வாரியாக 31.05.2025 வரை ஓய்வு பெற்ற ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்த பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் நாளது தேதி வரை தணிக்கை செய்யப்படாத அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் ,
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை அகத்தணிக்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது . 8 எனவே , 31.05,2025 வரை ஓய்வு பெறவுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் , அலுவலர்களின் விவரங்களையும் மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் விவரங்களையும் இணைப்பில் கண்ட படிவங்களில் ( படிவம் -1,23 ) தனித்தனியாக பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலருக்கு உடன் அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தாங்கள் பணிபுரிந்த காலங்களில் வரவு செலவு கணக்குகள் துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2025 வரை ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்களை coseauditsec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு - படிவம் -1
No comments:
Post a Comment