Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 24, 2025

‘எங்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள்..!’ - அரசை நம்பி பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளின் பரிதாப நிலை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
“அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி பி.எட் படித்த நாங்கள் கண்டுகொள்ள ஆளில்லாமல் கண்ணீராகி நிற்கிறோம்” என வெதும்புகிறார்கள் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள். மத்​திய அரசு சமக்ர சிக்​ஷா அபி​யான் (எஸ்​எஸ்ஏ) திட்​டத்​தின் கீழ், அரசுப் பள்ளி மாண​வர்​களுக்கு கணினி அறி​வியல் பாடம் பயிற்​று​விப்​ப​தற்​காக ஐசிடி (இன்ஃபர்​மேஷன் கம்​யூனிகேஷன் டெக்​னாலஜி) என்ற பாடத்​திட்​டத்தை அமல்​படுத்​தி, கம்​பியூட்​டர் லேப் அமைக்​க​வும், பயிற்​றுநர்​களை நியமிக்​க​வும் நிதி ஒதுக்கி வரு​கிறது.

அதன்​படி தமி​ழ​கத்​துக்கு 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சுமார் ரூ.434 கோடியை ஆண்டு தோறும் ஒதுக்​கி​யுள்​ளது. இந்​தத் தொகை​யில் 14,663 பள்​ளி​களில் ரூ.15 ஆயிரம் மதிப்​பூ​தி​யத்​தில் கணினி அறி​வியல் முடித்த கம்​பியூட்​டர் பயிற்​றுநர்​களை நியமித்​திருக்க வேண்​டும். ஆனால், தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை அதைச் செய்​ய​வில்லை எனக் கூறப்​படு​கிறது.

கருணாநிதி முதல்​வ​ராக இருந்த போது 2010-ல் சமச்​சீர் கல்​வித் திட்​டத்​தின் கீழ் அரசுப் பள்​ளி​களில் கணினி அறி​வியலை தனிப்​பாட​மாக கொண்டு வந்​தார். இதை நம்பி, கணினி அறி​வியல் படித்த பட்​ட​தாரி இளைஞர்​கள் 60 ஆயிரம் பேர், பி.எட் படித்​தனர். ஆனால், அடுத்து வந்த ஆட்சி மாற்​றத்​தால் கணினி அறி​வியல் தனிப்​பாடம் பள்​ளி​களில் இடம் பெற​வில்​லை. இதனால் தங்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கக்​கோரி பி.எட் முடித்த கணினி அறி​வியல் பட்​ட​தா​ரி​கள் போராட்​டங்​களை நடத்​தினர்.

இந்த நிலை​யில், ஸ்டா​லின் முதல்​வ​ராக வந்​ததும் தங்​களது பிரச்​சினை தீர வழிபிறக்​கும் தங்​கள் வாழ்​வில் ஒளி பிறக்​கும் என எண்​ணிய பி.எட் கணினி அறி​வியல் பட்​ட​தா​ரி​களுக்கு போராட்​டக் களமே மிஞ்​சி​யது. இதுகுறித்து தமிழ்​நாடு பி.எட் கணினி அறி​வியல் வேலை​யில்லா பட்​ட​தாரி ஆசிரியர்​கள் சங்​கத்தின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் வெ.குமரேசன் நம்​மிடம் வேதனை​யுடன் பேசி​னார்.

“கலைஞர் முதல்​வ​ராக இருந்​த​போது பள்​ளி​களில் தனிப்​பாட​மாக கணினி அறி​வியலை கொண்டு வந்​தா​லும் அதற்​கான பாடத்​திட்​டம் கொண்​டு​வரப்​பட​வில்​லை. இந்த நிலை​யில் தான் மத்​திய அரசு நாடு முழு​வதும் உள்ள அரசு பள்​ளி​களில் ஐசிடி பாடத்​திட்​டம் அமல்​படுத்​து​வதற்​கு, லேப்​களை அமைக்​க​வும் கணினி பயிற்​றுநர்​களை நியமிக்​க​வும் நிதி ஒதுக்​கியது.

அதன்​படி பள்​ளி​களில் கம்​பியூட்​டர் லேப்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், பயிற்​றுநர்​களை நியமிக்​க​வில்​லை. மாறாக, இல்​லம் தேடி கல்​வித் திட்​டத்​தில் பணி​யாற்​றிய​வர்​களுக்கு மாற்​றுப் பெயரில் பணி வழங்​கப்​பட்​டது. ஐசிடி ஆய்​வாளர் என்ற பெயரில் பணி​யமர்த்​தாமல் அவர்​களை நிர்​வாக ஆய்​வாளர்​கள் என பணி​யமர்த்தி உள்​ளனர். அவர்​கள் இன்று எமிஸ் பணி​யைத் தான் மேற்​கொள்​கின்​ற​னர். மாண​வர்​களுக்கு கணினி அறி​வியல் பாடம் நடத்துவதில்லை.

இதுதொடர்​பாக அமைச்​சர் அன்​பில் மகேஸை நேரில் சந்​தித்து முறை​யிட்​டும் எந்​தப் பயனு​மில்​லை. வேலை​யில்​லாத எங்​களுக்கு பெண் தர மறுக்​கின்​ற​னர். இதனால் ஆயிரக்​கணக்​கானோர் திரு​மண​மா​காமல் இருக்​கி​றோம். மத்​திய அரசின் நிதியை முறை​யாக தமிழக அரசு பயன்​படுத்​த​வில்​லை; கணினி அறி​வியல் பயிற்​றுநர்​களை நியமிக்​க​வில்லை என்​ப​தற்​கான ஆர்​டிஐ தகவல்​கள் அடங்​கிய 700 பக்க ஆதா​ரங்​கள் என்​னிடம் உள்​ளது.

இதில் கொடுமை என்​ன​வென்​றால், தமி​ழ​கத்​தில் கணினி அறி​வியல் தனிப்​பாட​மாக பள்​ளி​களில் இல்​லாத​தால், எங்​களால் ஆசிரியர் தகு​தித் (டெட்) தேர்​வும் எழுத முடி​யாது. எனவே, பள்​ளி​களில் கணினி அறி​வியலை தனிப்​பாட​மாக கொண்டு வரவேண்டும். அரசுப் பள்​ளி​களில், முறை​யாக கணினி அறி​வியல் படித்​தவர்​களை கணினி பயிற்​றுநர்​களாக நியமிக்க வேண்​டும். மத்​திய அரசு திட்​டத்​தின் கீழ் கேரளா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, குஜ​ராத் உள்​ளிட்ட பல மாநிலங்​களில் கணினி அறி​வியல் தனிப்​பாட​மாக உள்​ளது. கணினி ஆசிரியர்​களுக்கு அங்கு தகுந்த ஊதி​ய​மும் வழங்​கப்​படு​கிறது.

சர்​வ​தேச அளவில் மென்​பொருள் துறை​யில் தமி​ழர்​களே அதி​களவு கோலோச்சி வரு​கின்​ற​னர். அப்​படிப்​பட்ட தமிழ்​நாட்​டில் கலைஞர் வழி​யில் முதல்​வர் ஸ்டா​லின் கணினி அறி​வியலை தனிப்​பாட​மாக பள்​ளி​களில் கொண்டு வந்​து, பி.எட் முடித்த கணினி அறி​வியல் பட்​ட​தாரி இளைஞர்​கள் வாழ்​வில் ஒளி​யேற்ற வேண்​டும்” என்று சொன்​னார் அவர்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top