Join THAMIZHKADAL WhatsApp Groups

அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு சட்டக் கல்லூரி இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைவழி விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி மார்ச் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment