Join THAMIZHKADAL WhatsApp Groups
சீத்தாப்பழ இலைகளை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால், புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் போன்ற பயங்கரமான நோய்களையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்திவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சீதாப்பழ கொட்டைகளை எப்படி பயன்படுத்துவது?
சீதாபழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
எந்தெந்த உடல் பிரச்சனைகளுக்கு நல்லது? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சீத்தாப்பழத்தில் வைட்டமின் C, B, கால்சியம், மக்னீசியம், நீர்சத்து, மாவுச்சத்து, இரும்புச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன.
இதனால் சீத்தாப்பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.
சீதாப்பழத்தில் குளுக்கோஸ், சுக்ரோஸ் சம அளவு காணப்படுவதால்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது..
குழந்தைகளின் கவனிக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்க சீத்தாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வரவேண்டும்.
இதனால், தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி ஞாபகசக்தி அதிகரிக்கும்.
எலும்புகளை உறுதிப்படுத்தக்கூடிய அளவுக்கு கால்சியம் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு சீத்தாப்பழம் சிறந்த தேர்வாகும்.
மூட்டு வலி, முழங்கால் வலி இருப்பவர்களும், ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை உள்ளவர்களும் சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், இந்த பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.
இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.
சீதாபழக் கொட்டைகள்
சீதாபழம் மட்டுமல்லாமல், அதன் கொட்டைகளும் மருத்துவ குணமிக்கவை.. சரும நோய்களை சீத்தாப்பழ கொட்டைகள் நெருங்கவிடுவதில்லை.
இதில், ஃபேட்டி ஆசிட் நிறைய உள்ளதால், எரிவாயுவை உற்பத்தி செய்கின்றன.
அதேபோல, கருச்சிதைவு செய்யக்கூடிய சக்தி, சீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கிறதாம். எனவேதான், அபார்ஷன் மருந்துகளில், சீதாப்பழ விதைகளும் மூலப்பொருளாக சேர்க்கப்படுகின்றன. அதேபோல, பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவை கட்டுப்படுத்த சீதாப்பழ மரத்தின் வேர் பெரிதும் உதவுகின்றன.
இந்த கொட்டைகளை விழுதுபோல அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால், பேன் தொல்லை முழுமையாக நீங்கிவிடும்..
சீத்தாப்பழ இலைகள்
சீதாப்பழ இலைகளிலும் மருத்துவ குணம் அதிகமாக உள்ளன.. இந்த இலைகள் ஒருவரின் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.. காரணம், இதன் இலைகளிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், உடலிலுள்ள வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க செய்து, புற்றுநோய் செல்களுடன் போராடும் சக்தியை தருகிறது. இந்த இலைகளை பறித்து கழுவி சுத்தம் செய்து, கசாயம் போல குய்ச்சி குடித்தால், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.. அல்லது, இந்த இலைகளை டீயில் கலந்து கொதிக்க வைத்து குடித்தாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். இந்த இலைகளை பறித்து கழுவி சுத்தம் செய்து, கசாயம் போல குய்ச்சி குடித்தால், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.. அல்லது, இந்த இலைகளை டீயில் கலந்து கொதிக்க வைத்து குடித்தாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
உடலிலுள்ள காயங்கள், புண்கள், தழும்புகள், கொப்புளங்களை ஆற்றக்கூடிய தன்மை சீத்தாப்பழ இலைகளுக்கு உள்ளது.. எனவே, குளிர்ச்சி நிறைந்த இலைகளை, விழுதாக அரைத்து புண்கள் மீது பற்று போல போடலாம்.. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த இலைகளை மருந்தாக பயன்படுத்துவது ஆரோக்கியமானது.
No comments:
Post a Comment