Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 16, 2025

கொள்ளு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கொள்ளு, சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகள், உடல் எடை, மற்றும் தோல் பிரச்சனைகள் போன்ற பல நன்மைகளைத் தருகிறது.

சர்க்கரை நோய்க்கு:

கொள்ளு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் அது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

சிறுநீரக கற்கள்:

சிறுநீரக கற்களை போக்க கொள்ளு பயிறை உங்கள் தினசரி உணவில் தொடர்ந்து சேர்த்து கொள்ளலாம்.

மாதவிடாய் பிரச்சனைகள்:

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; மாதவிடாய் பிரச்னைகளை சரிப்படுத்தும்.

உடல் எடை:

உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு கொள்ளு ஒரு நல்ல உணவு.

சருமம்:

கொள்ளு சுருக்கங்கள், ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ், கருவளையம் போன்ற பல சரும பிரச்சனைகளை போக்கி சருமத்தை மென்மையாக்குகிறது.

புரதம்:

கொள்ளு பயறு உலகிலுள்ள பயறு வகைகளில் அதிக புரதச்சத்துள்ள ஒன்றாக உள்ளது

கொள்ளு சாப்பிட்டால் உங்களுக்கு அதீத பலம் கிடைக்கும்

1. கொள்ளை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது.

2. கொள்ளை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

3. கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.

4. உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும்.

5. வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளுநீர் குணப்படுத்தும்.

6. வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

7. கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

8. எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது.

9. கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

10. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top