Join THAMIZHKADAL WhatsApp Groups
1. கிழக்கு - பிராம்மி
2. தென்கிழக்கு - கௌமாரி
3. தெற்கு - வராஹி
4. தென்மேற்கு - சியாமளா
5. மேற்கு - வைஷ்ணவி
6. வடமேற்கு - இந்திராணி
7. வடக்கு - சாமுண்டி
8. வடகிழக்கு - மகேஸ்வரி
பிராம்மி
பிராம்மி என்பவர் பிரம்மாவின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களை உடையவர். அன்னப்பறவையை வாகனமாக கொண்டவர். வெண்ணிற ஆடை அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை ஆபரணமாக தரித்தவராகவும் உள்ளார்
கிழக்கு திசையின் சக்தி வடிவம். பிராமி சக்தியை வணங்குவதால் குழந்தைப் பேறும், கலை ஞானமும் உண்டாகும்.
கௌமாரி:
கௌமாரி என்பவர் முருகனின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தரித்து காணப்படுகிறார். மயில் பறவையினை வாகனமாக கொண்டவர். சேவல் கொடியினை கைகளில் தாங்கியிருப்பவர்
தென் கிழக்கு திசையின் சக்தி வடிவம். கௌமாரி தேவியை வழிபடுவதால் பதவி உயர்வும் மனதில் இருக்கும் பயமும் அகலும்.
வராஹி:
வராகி விஷ்ணுவின் வராக அவதாரத்தின் அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், நான்கு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்.
தெற்கு திசையின் சக்தி வடிவம். வராஹி தேவியை வணங்கி வருவதால் எதிரிகளை அழித்து வெற்றி கொள்ளலாம். மனதில் தைரியம் பிறக்கும்.
சியாமளா:
“சியாமளா” என்பது கருத்த நீல நிறத்தினைக் கொண்டவள் என்று பொருள்படும்.
மீனாட்சி அம்மனின் அவதாரமாக திகழ்பவள் சியாமளா தேவி.
தென் மேற்கு திசையின் சக்தி வடிவம். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் தேர்ச்சி மற்றும் அறிவுக்கூர்மை உண்டாகும்.
வைஷ்ணவி:
வைஷ்ணவி என்பவர் விஷ்ணுவின் அம்சமாவார். இவருக்கு நாராயணி என்ற மறுபெயருண்டு. இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் சக்கரத்தினையும், சங்கினையும் தரித்துக் காணப்படுகிறார்
மேற்கு திசையின் சக்தி வடிவம். வைஷ்ணவியை வழிபடுவதால் உடல் ஆரோக்கியமும் எண்ணங்களில் மேன்மையும் உண்டாகும்.
இந்திராணி:
இந்திராணி தேவலோகத்து அரசனான இந்திரனின் அம்சமாவார். நான்கு கரங்களை கொண்ட இவர், பின் இரு கரங்களில் சக்தியையும், அம்பினையும் ஆயுதமாக கொண்டு காட்சியளிக்கிறார். ரத்தின கிரீடம் தரித்து வெண் யானை வாகனத்தில் அமர்ந்திருப்பவர்
வடமேற்கு திசையின் சக்தி வடிவம். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கை துணை அமைத்து தருவார். பணத் தட்டுப்பாடு குறையும்.
சாமுண்டி:
சாமுண்டி என்பவர் சண்டியின் அம்சமாவார். எந்த விதமான சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதவர். நான்கு கரங்களும், மூன்று நேத்திரங்களும், கோரைப்பற்களும், கரு மேனியும் உடையவர். இவர் புலித்தோல் உடுத்தி கபால மாலையை அணிந்திருக்கிறார். முத்தலைச் சூலம், முண்டம், கத்தி, கபாலம் ஆகிய ஆயுதங்களை தரித்தும், பிணத்தின் மீது அமர்ந்தும் காட்சியளிக்கிறார். இவர் சண்டர் முண்டர் என்ற அரக்கர்களை அழித்த அவதாரம் ஆவர்
வடக்கு திசையும் சக்தி வடிவம். சாமுண்டியை வணங்கி வருவதால் எடுத்த செயலில் எவ்விதமான இன்னலும் இன்றி வெற்றியும், பாதுகாப்பும் உண்டாகும்.
மகேஸ்வரி:
மகேசுவரி என்பவர் சிவனின் அம்சமாவார். இவர் சிவனைப் போன்று முக்கண்ணும், ஐந்து திருமுகமும் உடையவர். கரங்களில் பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு என்ற ஐந்து ஆயுதங்களை தரித்தும், ரிசபத்தினை வாகனமாக கொண்டவர்
வடகிழக்கு திசையின் சக்தி வடிவம். மகேஸ்வரியை வழிபடுவதால் ஐயங்கள் மற்றும் கோபம் நீங்கும். சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடியவர்.
No comments:
Post a Comment