Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் கற்றல் திறனில் தேர்ந்த பள்ளிகள் அமைச்சர், இணை இயக்குனர் ஆய்வுக்கு அழைக்க சவால் விடலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறிய நிலையில், அந்தந்த கல்வி மாவட்டங்களில் வட்டாரக்கல்வி அலுவலர்களே சேலஞ்ச் பள்ளிகள் பட்டியலை அனுப்பியுள்ளனர். பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தலைமை ஆசிரியர்கள் விழிபிதுங்குகின்றனர்.
தமிழகத்தில் கற்றல் திறனில் தேர்ந்த துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வர அமைச்சர், இணை இயக்குனருக்கு சவால் விடலாம் என அமைச்சர் மகேஷ் கூறினார். இந்நிலையில் அந்தந்த கல்வி மாவட்டங்களில் வட்டாரங்களில் கற்றல் திறனில் தேர்ந்த பள்ளிகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்து அந்தந்த டி.இ.ஓ.,க்களிடம் பட்டியல் அளித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment