Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 8, 2025

அகத்தியர் கூறிய ஜலதோசத்திற்கான மருத்துவம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று ஜலதோஷம் பிடித்தவர்கள் புலம்புவதை கேட்டிருக்கிறோம்.

ஆனால், உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. அவற்றில் குறிப்பிட்ட ஒரு சிலவற்றை பார்ப்போம்.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் (மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாக கூறப்பட்டுள்ளது.

அகத்தியர் தன் நூலில் ‘அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும்’ என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும், ஆனால் அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதுதான் ஜலதோஷத்தை தீர்த்து வைக்கும மருந்து. நமது முன்னோர்கள் மருத்துவ குறிப்புகள் பலவற்றை மர்மமான வார்த்தை ஜாலத்தால் பல்வேறு காரணங்களால் மறைத்து வைத்திருக்கின்றனர். அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாததால்தான் நமது பாரம்பரிய வைத்திய முறைக்கு ஆதரவு குறைந்து போனதற்கு முக்கிய காரணமாகும்.

வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் , மஞ்சள் பொடி (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து மண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும். சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் வேண்டாம். மஞ்சள் சேர்வதால் எக்காரணம் கொண்டும் உடல் புண்ணாகாது.

இக்கலைவை பூசியதும் சுமார் 1 மணி நேரம் நன்றாக தூக்கம் வரும், ஒரு மணிநேரத்திற்கு பின்பு பார்த்தால் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் முழுவதுமாக குணமாகிவிடும். சிறுவர்களுக்கும் இதை பயன்படுத்தலாம்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top