Join THAMIZHKADAL WhatsApp Groups
தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் பொறியில் பட்டதாரிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பொறியியல் பிரிவில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், இசிஇ, பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஎம் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல், டிப்ளமா மற்றும் இளநிலை பட்டம் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் (https://nats.education.gov.in) ஏப்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment