Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 1, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2025

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வாங்கரி மாத்தாய்



திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்:நன்றி இச் செல்வம்

குறள் எண்:1002
 பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்
 மருவான்ஆம் மாணாப் பிறப்பு.

பொருள்:
அனைத்தும் பொருளால் ஆகும் என்று பிறர்க்கு கொடுக்காத கருமியில்
மறுமையில் இழி
 பிறப்பு உண்டாகும்.

பழமொழி :

A cracked bell never sounds well 

உடைந்த சங்கு ஒரு நாளும் பரியாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன்.  

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

வாய்மைக்கு மிகவும் நெருங்கிய நண்பன் அச்சமின்மையே!--நேரு

பொது அறிவு : 

1. அணுவின் மைய பாகத்தை உருவாக்குவது எது?

நியூட்ரான் மற்றும் புரோட்டான்

2. இளம் அன்னப் பறவையின் பெயர் என்ன?

சிக்னட் cygnet

English words & meanings :

 Medicine.    -     மருந்து 
 
Nausea.     -    குமட்டல்

வேளாண்மையும் வாழ்வும் : 

 பல் துலக்கும் போதும், முகச் சவரம் செய்யும் போதும் தண்ணீர்க் குழாயை திறந்து விட்டுச் செல்லாமல் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள்.

ஏப்ரல் 01

வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்

வாங்கரி மாத்தாய் (Wangari Maathaiஏப்ரல் 11940 - செப்டம்பர் 252011கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.   ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.

நீதிக்கதை

 உங்க பேரைச் சொல்லி....


கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார்.அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார்.

"உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?'' என்று அன்புடன் கேட்டார்.

"இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராக இருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்குகிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. நாங்கள் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறோம்,'' என்றனர்.

அவர்கள் துன்பத்தைப் போக்க வேண்டும், அந்தப் பண்ணையாருக்கு நல்ல பாடம் கற்றுத் தர வேண்டும்என்று நினைத்தார் கந்தசாமி.

"அந்த பண்ணையார் எப்படிப்பட்டவர்? அவரைப் பற்றிச் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.

"அவர் சண்டைச் சேவல்கள் வைத்திருக்கிறார். எங்கே சேவல் சண்டை நடந்தாலும் அதில் அவர் கலந்து கொள்வார்,'' என்றான் அவர்களில் ஒருவன்.

"இந்தச் செய்தி எனக்குப் போதும். நான் சொல்வது போலச்செய்யுங்கள். உங்கள் துன்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன்,'' என்றார் கந்தசாமி.

""நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என்றனர்.

"எனக்கு ஒரு சண்டைச் சேவலும், இருநூறு பணமும் தேவை,'' என்றார்.தன் திட்டத்தை அவர்களிடம் சொன்னார்.

உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து, இருநூறு பணம் திரட்டினர். ஒரு சண்டைச் சேவலையும் அவரிடம் தந்தனர்.அவர்களில் நால்வரை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டார் கந்தசாமி.

பண்ணையாரின் வீட்டிற்குச் சென்றார். அவர் கையில் சண்டைச் சேவல் இருந்தது.பண்ணையாரை வணங்கிய அவர்,"ஐயா! சேவல் சண்டை என்றாலே உங்கள் பெயர் எங்கும் பரவி உள்ளது. நேற்று எங்கள் ஊரில் சேவல் சண்டை நடந்தது.

""அதில் உங்கள் பெயரைச் சொல்லி, இந்தச் சேவலை சண்டைக்கு விட்டேன். இந்தச் சேவல் வெற்றி பெற்று விட்டது.பரிசுப் பணமாக நூறு பணம் கிடைத்தது. உங்களால் கிடைத்த பரிசுப் பணம் இது. உங்களிடம் பணத்தைத் தர வந்தேன்,'' என்றார்.

பணத்தை அவரிடம் நீட்டினார்.பணத்தைப் பெற்றுக் கொண்டார் பண்ணையார்.

"உன் சண்டைச் சேவல் நன்றாக உள்ளது. நல்ல பயற்சியும் தந்துள்ளாய். என் பெயரைச் சொல்லிப் போட்டியில் கலந்து கொள். மேலும், மேலும்   உனக்கு  வெற்றி கிடைக்கும்,'' என்று பாராட்டினார்.

அடுத்த வாரம் மீண்டும் அங்கு வந்தார் கந்தசாமி.அவருடன் அந்த ஊரைச் சேர்ந்த வேறு நான்கு பேர் வந்திருந்தனர்.

பண்ணையாரை வணங்கிய அவர்,"உங்கள் பெயரைச் சொல்லி நேற்றும் சேவல் சண்டையில் கலந்து கொண்டேன். எனக்கே வெற்றி கிடைத்தது. பரிசாகக் கிடைத்த நூறு பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்,'' என்று தந்தார்.

அவர் சூழ்ச்சியை பண்ணையார் அறியவில்லை. அந்தப் பணத்தையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

அடுத்த வாரம் கந்தசாமி நான்கு பேருடன் பண்ணையாரிடம் வந்தார்.அவர் கையில் சண்டைச் சேவல் இல்லை.இதை பார்த்த பண்ணையார்,"என்ன வெறுங்கையுடன் வந்திருக்கிறாய்? சண்டைச் சேவல் எங்கே?'' என்று கேட்டார்.

"நேற்று நடந்த போட்டியில் என் சண்டைச் சேவல் தோற்று இறந்துவிட்டது. கண்டிப்பாக அது வெற்றி பெறும் என்று நம்பினேன். அதனால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் நூறு பொற்காசு பந்தயம் வைத்தேன்.

இதுவரை வெற்றி பெற்றுக் கிடைத்த பணத்தை உங்களிடம்தான் தந்தேன். இப்போது தோற்று விட்டேன். இவர்களுக்கு நீங்கள்தான் பொற்காசுகளைத் தர வேண்டும்,'' என்றார் கந்தசாமி.

"நீ தோற்றதற்கு நான் எதற்கு பொற்காசுகள் தர வேண்டும்? என்ன விளையாடுகிறாயா?''என்று கோபத்துடன் கத்தினார் பண்ணையார்.

"சேவல் வெற்றி பெற்ற போது நீங்கள் எப்படிப் பணத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். இதேபோலச் சொல்லி அப்போது நீங்கள் மறுத்து இருக்க வேண்டாமா?

"வெற்றி பெற்றால் பணம் உங்களுக்கு. தோல்வி அடைந்தால் இழப்பு எனக்கா? இது என்ன நியாயம்? நீங்கள் பணத்தைப் பெற்றதற்கு இந்த ஊரில் நிறைய சாட்சிகள் இருக்கின்றன. மரியாதையாக இவர்கள் நால்வருக்கும் ஆளுக்கு நூறு பொற்காசுகள் தாருங்கள். இல்லை என்றால் ஊரைக் கூட்டி, உங்களை அவமானப்படுத்துவேன். உங்களிடமிருந்து, கட்டாயப்படுத்தி அந்த பொற்காசுகளை வாங்குவேன்,'' என்றார் கந்தசாமி.

அப்போதுதான் பண்ணையாருக்கு அவரின் சூழ்ச்சி புரிந்தது. ஊர் மக்களிடம் தன் பேச்சு எடுபடாது என்பதையும் அறிந்து கொண்டார்.

வேறு வழியில்லாத அவர், நானூறு பொற்காசுகளைஅவர்களிடம் தந்தார். "பேராசையினால் இப்படிப்பட்ட இழப்பு வந்ததே' என்று வருந்தினார் பண்ணையார்.

அந்தப் பொற்காசுகளை ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார் கந்தசாமி.

நீதி: பேராசை பெரும் நஷ்டம்

இன்றைய செய்திகள்

01.04.2025

* அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

* வணிகர்கள், தொழில்முனைவோருக்கு ஏப்ரல் 3-ல் ‘சாட் ஜிபிடி’ பயிற்சி வகுப்பு: சென்னையில் நடக்க உள்ளது.

* மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* ‘மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று அந்நாட்டு ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.

* மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி செர்பிய வீரர் மென்சிக் சாம்பியன்.

* கால்பந்து காட்சி போட்டி: இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்தி பிரேசில் ஜாம்பவான் வெற்றி.

Today's Headlines

* To address the increasing electricity demand, the Tamil Nadu Electricity Board plans to implement a 660-megawatt expansion project for the Ennore Thermal Power Plant.

   * A "ChatGPT" training workshop for business owners and entrepreneurs will be held in Chennai on April 3rd.

   * The Armed Forces Special Powers Act has been extended for another six months in Manipur and other northeastern states.
 
   * The death toll from the earthquake in Myanmar has risen to 2,056.More than 3,900 people have been injured.270 people are still missing, according to the Myanmar military junta.

   * Serbian player Mensik defeated Djokovic to win the Miami Open tennis championship.
 
   * The Brazilian legends team defeated the India All-Stars team in a football friendly match.

Covai women ICT_போதிமரம்

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top