Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 11, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.04.2025

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மகாத்மா ஜோதிபா  புலே 

 






திருக்குறள்: 

பால் :பொருட்பால்

இயல்: குடியியல்

குறள் எண்:1009 

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்

அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பொருள்:
அன்பின்றி அறம் செய்யாது சேர்த்த பொருளை எடுத்துக் கொள்வார் யாரோ?

பழமொழி :

No sweet without sweat

வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன். 

* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல்  எழுதுவேன்.

பொன்மொழி :

நேற்றிலிருந்து கற்றுக்கொள் ,இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை மட்டும் நிறுத்தாதே.---ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொது அறிவு : 

1. காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 

விடை: தமிழ்நாடு.


2. இந்தியாவில் அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது? 

விடை : குஜராத்

English words & meanings :

 Subway      -     சுரங்கப்பாதை 

 Submarine      -     நீர்மூழ்கிக் கப்பல்

வேளாண்மையும் வாழ்வும் : 

 நீர் சேமிப்பு உத்திகளில் ஒன்று மழைநீர் சேகரிப்பு ஆகும்.குளங்கள், ஏரிகள், கால்வாய்களை துார்வாருதல், நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்துதல், மழைநீர் பிடிக்கும் குழாய்கள் மற்றும் வடிகட்டும் அமைப்புகளை வீடுகளில் நிறுவுதல் ஆகியவை மழைநீரை சேகரிக்கும் வெவ்வேறு முறைகளாகும்.

ஏப்ரல் 11

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே (மராத்திजोतीबा गोविंदराव फुले ஆங்கில மொழி: Mahatma Jyotirao Govindrao Phuleஇந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.

நீதிக்கதை

 குரங்கு அறிஞர்


ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.


”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.


”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.


”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.


அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.


அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.


”குரங்கை வெளியே அனுப்புங்கள்" என்று கத்தினர்.


கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் 

அது தொந்தரவு தராதவாறு 

நான் பார்த்துக் கொள்கிறேன்!”


அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. 


பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.


அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். ”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.



அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.



“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.



அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.


அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.


நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

இன்றைய செய்திகள்

11.04.2025

* சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

* சென்னையை அடுத்த ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட சரக்கு முனைய வசதியை நிறுத்தியது இந்தியா.

* அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரி யுத்தம் வலுத்துள்ளது. சீனா மீதான வரியை 104% ஆக ட்ரம்ப் உயர்த்திய நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% ஆக உயர்த்தி உள்ளார்.

* ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி.

* ஐ.பி.எல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தோனி கேப்டன்.

Today's Headlines

* The Minister of Micro, Small, and Medium Enterprises (MSME ) Tha.mo. Anbarasan, announced in the legislative assembly that the maximum limit for additional investment subsidies for small businesses will be increased from ₹5 lakh to ₹10 lakh.

   * An agreement was signed in the presence of Chief Minister M.K. Stalin with Dixon Technologies Limited at the IndoSpace Industrial Park in Oragadam, Chennai, for an investment of ₹1,000 crore, creating 5,000 job opportunities.
 
   * India has stopped the cargo terminal facility provided to Bangladesh.
 
   * The trade war between the United States and China has intensified. Following Trump's increase of tariffs on Chinese goods to 104%, Chinese President Xi Jinping has raised tariffs on American goods to 84%.
 
   * Asian Badminton Championship: P.V. Sindhu won her first-round match.

   * IPL 2025: Dhoni will captain Chennai Super Kings again.

Covai women ICT_போதிமரம்

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top