Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழக காவல்துறையில் 53 ஆதி திராவிடா்கள், பழங்குடியினா் வகுப்பினருக்கான பின்னடைவு இடங்கள், காவல் சார்பு ஆய்வாளர்(தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் காலியிடங்கள் என 1,352 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்,
பணி: காவல் ஆய்வாளர்
காலியிடங்கள்: 1,352
காவல் சார் ஆய்வாளர்கள் பிரிவில் ஆண்கள் 654, பெண்கள் 279, காவல் உதவி ஆய்வாளர்கள்(ஆயுதப்படை) ஆண்கள் 255, பெண்கள் 111. இதில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான 53 காலியிடங்கள் பின்பற்றப்படும்.
மொத்த காலியிடங்களில் விளையாட்டு வீரா்களுக்கு 10 சதவீதம் (ஆண்களுக்கு 7 சதவீதம், பெண்களுக்கு 3 சதவீதம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையில் பணியாற்றும் போலீஸாருக்கு 20 சதவீதமும், காவல் துறையினரின் வாரிசுகளுக்கு 10 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த ஒதுக்கீடு சலுகை பின்னடைவு பணியிடங்களுக்கு பொருந்தாது.
சிலம்பம் சோ்ப்பு: உதவி ஆய்வாளா் தோ்வில் விளையாட்டு வீரா்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளின் பட்டியலில் தற்போது முதல்முறையாக சிலம்பம் விளையாட்டும் சோ்க்கப்பட்டுள்ளது. அதன்படி, சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற சிலம்பம் வீரா்கள் இந்தப் பிரிவில் இடஒதுக்கீட்டை பெறலாம்.
சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி பொதுப்பிரிவினா் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பிறப்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடா், பழங்குடியினா், மூன்றாம் பாலினத்தவா்கள் 35 வயதுக்குள்ளும், ஆதரவற்ற விதவைகள் 37 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதலில் எழுத்துத் தோ்வும், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும்.
உடற்தகுதி, காலியிடங்களின் விவரம், தோ்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஏப்ரல் 7 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.5.2025
No comments:
Post a Comment