Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 6, 2025

ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசுப் பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, இந்திய ரயில்வே 16 மண்டலங்களில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசுப் பணி அறிவிப்புக்காக காத்திருந்த தகுதியான இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம்.

அறிவிப்பு எண்:01/2025 (ALP)

பணி: Assistant Loco Pilot (ALP)

காலியிடங்கள்: 9,970

ரயில்வே மண்டலங்கள் வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. மத்திய ரயில்வே - 376

2. கிழக்கு மத்திய ரயில்வே - 700

3. கிழக்கு கடற்கரை ரயில்வே - 1461

4. கிழக்கு ரயில்வே - 768

5. வட மத்திய ரயில்வே - 508

6. வட கிழக்கு ரயில்வே - 100

7. வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே - 125

8. வடக்கு ரயில்வே - 521

9. வடமேற்கு ரயில்வே - 679

10. தெற்கு மத்திய ரயில்வே - 989

11. தென்கிழக்கு மத்திய ரயில்வே - 568

12. தென்கிழக்கு ரயில்வே - 796

13. தெற்கு ரயில்வே - 510

14. மேற்கு மத்திய ரயில்வே - 759

15. மேற்கு ரயில்வே - 885

16. மெட்ரோ ரயில்வே கொல்கத்தா - 225

சம்பளம்: மாதம் ரூ.19,900

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி பொதுப் பிரிவினர்கள் 18 முதல் 30 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு ரயில்வே விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter, Electrician, Instrument Mechanic, Mill Wright, Maintenance Mechanic, Electronics, Radio & TV Mechanic, Wireman, Turner, Machinist, Refrigeration & Air Conditioning போன்ற ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றிருப்பவர்கள், பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics, Automobile போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத்தேர்வு, மருத்துவத் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். கேள்விகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இருக்கும் இதில் ஏதாவதொரு மொழியை தேர்வு செய்து தேர்வை எழுதலாம். எழுத்துத்தேர்வு பற்றிய விபரம் மின் அழைப்பு கடிதம்(E-Call Letter) மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்ட ணம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகளுக்கு ரூ.250, இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrbchennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.4.2025 முதல் 9.5.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களை www.rrbchennai.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News