Join THAMIZHKADAL WhatsApp Groups

இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.
UIDAI உதவியுடன் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் கியூஆர் கோட் அடிப்படையிலான சரிபார்ப்பு வசதி உள்ளது. இந்த செயலி மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் UPI பேமெண்ட் களையும் செய்யலாம் என அமைச்சர் கூறினார். இந்த டிஜிட்டல் செயலி 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும் இந்த டிஜிட்டல் ஆதார் செயலி விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment