Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 6, 2025

ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால் எஃப் .ஐ .ஆர் தேவையில்லை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. தொலைந்துபோன ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக நகல் உரிமம் பெற http://www.eservices.tnpolice.gov.in இணையதளத்தில் தொலைந்துபோன என்ற ஆவண அறிக்கை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று பதிவு செய்து, தாங்களே பிரிண்ட் எடுத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனால் வீண் அலைச்சலை தடுக்க முடியும்.

வாகனப் பதிவு சான்று தொலைந்து போனாலும் இதே முறையை பின்பற்றி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஓட்டுநர் உரிமத்தின் நகல் ஆவணம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News