Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 6, 2025

சிறையில் தள்ளினாலும், உயிரே போனாலும் போராடுவோம் - ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
எங்களுடைய ஊதிய முரண்பாடு குறையும் வரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம். எங்களுடைய உயிரே போனாலும் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்

எங்கள் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் எங்களை சிறையில் தள்ளினாலும் எங்களுடைய ஊதிய முரண்பாடு களையும் வரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம். எங்களுடைய உயிரே போனாலும் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்தார்.

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில் இடைநிலை பதவிமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலை சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றக்கோரி 20 ஆயிரம் இடைக்கால ஆசிரியர்களை நடப்பு பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, செய்தியாளர்களுடன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:

2009 இல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே பதவி, ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி என அனைத்தும் இருந்த போதும், கடந்த திமுக ஆட்சி காலத்தில் இரு வேறு அடிப்படை ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது ரூ.3,170 ஆக குறைவு ஏற்பட்ட ஊதிய முரண்பாடு தற்போது ரூ.27 ஆயிரம் வரை ஊதிய முரண்பாட்டை ஒவ்வொரு மாதமும் சந்தித்து வருகிறோம்.

கடந்த ஆட்சியில் தற்போதைய முதல்வர் உங்களுடைய ஊதிய முரண்பாடு களையப்படும் என்று போராட்ட களத்திற்கே வந்து வாக்குறுதி அளித்தார். அது திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு ஆகியும் இதுவரை ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.

எட்டு நாள் உண்ணாவிரதம், 19 நாள் முற்றுகை போராட்டம் என அத்தனை வழியிலும் அரசுக்கு எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தையின் போதும் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் அதற்கு ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

பேரிடர் நிவாரண நிதி! தமிழ்நாட்டுக்கு ரூ. 522.34 கோடி ஒதுக்கீடு

ஒரு நாளைக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.620 அடிப்படை உதயமாக உள்ளது. 10, 12 ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும், தகுதித்தேர்வு நியமனத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் எடுத்தால் தான் இடைநிலை ஆசிரியர் பணி கிடைக்கிறது.

எங்களுடைய கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அப்படி நிறைவேற்றினால் நன்றி அறிவிப்பு மாநாடு ஒன்றை நடத்துவோம்.

அப்படி நிறைவேறவில்லை என்றால் எங்களை சிறையில் தள்ளினாலும் எங்களுடைய ஊதிய முரண்பாடு களையும் வரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம்.

2009 இல் இருந்த பல பேர் ஓய்வு பெற்று விட்டனர். இனிமேல் இருப்பவர்களுக்காவது ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.

11 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். எங்களுடைய வாழ்வாதாரம் இது ஒன்று மட்டும் தான். அரசு இன்னும் தாமதப்படுத்தினால் கடைசி கட்டமாக சிறையை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களுடைய உயிரே போனாலும் இந்த போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று கூறினார்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top