Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது 11.04.2022 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள் . அதனைத் தொடர்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பார்வையில் கண்டுள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .
பள்ளிக் கட்டமைப்பு , கல்விச் செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அளவிலான தேர்வுக் குழு , பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு , ஆய்வின் அடிப்படையில் பார்வையில் கண்டுள்ள அரசாணையின் பின்னிணைப்பு -1 ல் தெரிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு இரு மடங்கு எண்ணிக்கையிலான தலைமை ஆசிரியர்களைத் தெரிவு செய்து மதிப்பீட்டுப் படிவம் மற்றும் விவர அறிக்கையினை மாநிலத் தேர்வுக் குழுவுக்கு 25.04.2025 க்குள் பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது . இப்பொருள் சார்ந்து , பார்வையில் கண்டுள்ள அரசாணையின் படி மாவட்ட தேர்வுக் குழு அமைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய / பணியாற்றி வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் , பள்ளி வளர்ச்சிக்கு தலைமை ஆசிரியரின் பங்களிப்பு ஆகியவனவற்றை கருத்திற்கொண்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு மாநில தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைகள் சமர்ப்பித்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
👇👇👇👇
DSE - Anna Leadership Award Proceedings - Download here
No comments:
Post a Comment