Join THAMIZHKADAL WhatsApp Groups
உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும், பல்வேறு பிரசச்னைகள் ஏற்படும். நமது உடல், 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது. ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, தோலின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம், ஏன் எலும்பில்கூட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன.
உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க நீர் முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.
நீர் முத்திரை என்பது, நீர் மற்றும் நெருப்பு ஆகிய இரண்டு பஞ்சபூதங்களை சமன் செய்வதற்காக செய்யப்படும் ஒரு யோகா முத்திரை ஆகும்.
நீர் முத்திரை எப்படி செய்வது என்று பார்ப்போம்?
படத்தில் காட்டி உள்ளபடி தரையில் அமர்ந்தோ அல்லது நாற்காலியில் அமர்ந்தோ, கட்டை விரலின் நுனியை சுண்டு விரலின் நுனியில் தொட்டுக் கொள்ளவும், மற்ற விரல்களை நேராக நீட்டவும், செய்யலாம்.
நீர் முத்திரை செய்வதால் ஏற்படும் பயன்கள்:
உடலில் நீர் சத்தை தக்கவைக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு தாகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
பருக்கள், முகப்பருக்கள் போன்ற தோல் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
உடலின் வெப்பத்தை சமன் செய்கிறது
உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று சரி செய்கிறது.
முழங்கால் மூட்டு வலி, இடுப்பு வலி, மணிக்கட்டு மற்றும் சிறுமூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கங்களைக் குறைக்கிறது.
மூட்டுகளில் தேங்கும் வாயுவே வலி வரக் காரணம். அதிகப்படியான வாயுவைக் குறைத்து, வலியைக் குறைக்கிறது.
இடுப்பு எலும்புத் தேய்மானம், சவ்வு விலகல், ஈரப்பசை குறைதலுக்கு சிறந்த பலன் அளிக்கிறது.
மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை நார் கிழிவுகளில் ஏற்படும் பிறழ்வு, வலி, வீக்கத்துக்குத் தீர்வு கிடைக்கிறது.
நீர் முத்திரை செய்யக் கூடாதவர்கள்
ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது. முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
No comments:
Post a Comment